ஆலய விருட்சங்கள்
சூரியனார் திருத்தலம்
ஸ்ரீ சூரியனார் திருக் கோவில்
தஞ்சை மாவட்டத்துல் காவிரியின் வடகரையில்,கும்ப கோணத்தில் இருந்து சுமார் 14 கிமீ தூரம்.
இங்கு தல விருட்சம் வெள்ளெருக்கன்.சிவனுக்கு உகந்த பூக்களில் வெள்ளெருக்குக்கு முக்கிய இடம் உண்டு.
"வெள்ளெருக்கன் சடை முடியான்,வெற்பெடுதரத்த திருமேனி" என்று ராமாயணத்தில் போற்றுகிறார் கம்பர்.
ஆலயத்தில் கிழக்கு நோக்கி சிம்ம ராசியின் மீது ஆட்சி செய்கிறார் சூரிய பகவான்.எனவே சிம்ம ராசிக் கார்ர்கள் நோய் மற்றும் வினைகளை வெள்ளெருக்கன் தீர்ப்பான் என்று கூறுவார்கள்.
இதன் இலை,பூ,தண்டு,வேர் அனைத்து பாகங்களிலும் பால் உண்டு.
இந்தப்பால் தோல்வியாதியைப் போக்க வல்லது.
வெள்ளெருக்கு வேரில் செய்த விநாயகரை வழிபாடு செய்தால் சகல பாவங்களும் போகும்.சந்தோஷம் பெருகும்.
எனவே தல விருட்சங்களை தரிசிப்பது சிறப்பு!
Comments