Skip to main content

1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது

இந்த பதிவை படிப்பவர்கள்ஸ முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விறகிற்கு பயன்படும் என்று வெளிநாட்டிலிருந்து சீமை கருவேலம் (Prosopis Juliflora) விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன.

இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்…!
கடந்த 62 ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளை படர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளை நிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  இதை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் விஷமாகி விடும்.
சீமைக் கருவேல மரங்கள்…

இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது.
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம்.
எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல் வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது .
தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது.
ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.
காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம்
மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை.
தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது யாருக்கும் இது வரை புரியவில்லை.
ஆனால், இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக இம்மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள்.
தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள்.
வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.
இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அரியாது இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.
முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான்.
இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது.
இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது.
ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.
அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள்.
வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள்.

அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. 
அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது.
இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது.
அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள்,
ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.
கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள் ஆனால் அவர்களின்   தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்கிறது…!
சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா
போல் குளுமை பெறும்.

இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் !
அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.
நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..
நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்றவற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்.
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!
நம் மண்ணின் மாண்பை காப்போம்!!

Comments

Popular posts from this blog

TNPSC Combined Technical Services Examination 2025 - Non Interview Posts

Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10***   Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025

Technical Publication Ebooks Free Download

CSE - Technical Publication eBooks (R17) 🧩 ~~~ The below mentioned books are only available to us through Mr. Sai Seena ( @SaiSeena ), if you have any other E-BOOKS for any department kindly share it to us. Thank You ~~~ 🧩  *CSE - SEMESTER I*   *GE8151 - Problem Solving and Python Programming*  https://tinyurl.com/GE8151-TP  *CSE - SEMESTER II*   *HS8251 - Technical English*  https://tinyurl.com/HS8251-TP  *BE8255 - Basic Electrical, Electronics and Measurement Engineering*  https://tinyurl.com/BE8255-TP  *GE8291 - Environmental Science and Engineering*  https://tinyurl.com/GE8291-TP  *CS8251 - Programming in C*  https://tinyurl.com/CS8251-TP  *CSE - SEMESTER III*   *CS8391 - Data Structures*  https://tinyurl.com/CS8391-TP  *CS8392 - Object Oriented Programming*  https://tinyurl.com/CS8392-TP  *EC8395 - Communication Engineering*  https://tinyurl.com/EC8395-TP  *CSE - SEM...

Maruti Suzuki Dzire is the No1 Car in May 2025 Sales. here is the Top Cars sold in May 2025

Best Selling Cars May 2025 Top Car Brands (May 2025) Modelwise Sales (May 2025) Credit: Auto Punditz https://www.autopunditz.com/post/indian-car-sales-figures-may-2025